''தலைவர் அரசியலுக்கு வர இதுதான் தருணம்!''

ல வருடங்களாகவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவர் ரசிகர்கள் அழைத்தாலும், அது குறித்து நேரடியாக ரஜினி எந்த அறிவிப்பும் வெளியிடாமல், ‘வரும்... ஆனா வராது...’ பாணியிலேயே இருந்து வருகிறார். தற்போது, மீண்டும் ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி, ‘தலைமையேற்க வா’ போஸ்டர்கள் தென்படத் தொடங்கிவிட்டன. இந்த போஸ்டர் அடித்த ரசிகர் மன்ற நிர்வாகி கலுங்கடி பி.சதிஸ்பாபுவைத் தொடர்புகொண்டு பேசினேன்.

“ ‘சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம்’ங்கிற பேர்ல ஏற்கெனவே ஒரு கட்சியை ரசிகர்கள் தொடங்கினாங்களே..?”

“ஆமாம். அவர் அப்போது அரசியலுக்கு வரும் முடிவில் இல்லை என்பதால் அவரை வற்புறுத்துவதற்காக சூப்பர்ஸ்டார்ஸ் மக்கள் கழகத்தைத் திருப்பூரைச் சேர்ந்த முருகேஷ் தலைமையில் தொடங்கினோம். ஆனாலும், சூப்பர் ஸ்டார் இந்தக் கட்சிக்குத் தலைமை தாங்க முடியாதுன்னு சொல்லிட்டார். கட்சிக் கொடியில் தனது படத்தைப் பயன்படுத்த வேண்டாம்னு அவரே கேட்டுக்கொண்டதால கொடியின் நடுவில் இருக்கிற நட்சத்திரம் காலியாகவே இருக்கு. இப்போ இருக்கிற சூழ்நிலையில் அவர் அரசியலுக்கு வரணும்னு எதிர்பார்க்கிறோம். ரசிகர்கள் தலைவரின் மீதுள்ள அபிமானத்தால் தொடங்கின கட்சிக்கும், தலைவரே தலைமையேற்று நடத்துற கட்சிக்கும் வித்தியாசம் இருக்கும். தலைவர் புதுக்கட்சி ஆரம்பித்தால் இந்தக் கட்சிக்குத் தேவையிருக்காது.”

“ரஜினியிடம் இதுபற்றி வலியுறுத்தி இருக்கிறீர்களா?”

“அவருக்கு ரசிகர்களின் விருப்பம் என்னவெனத் தெரியும். கடந்தவருடப் பிறந்தநாளின்போது சந்தித்தோம். ரசிகர்களைப் பற்றிக் கேட்டு அறிந்துகொண்டார். அவருக்கு அவர் ரசிகர்கள் மீது என்னிக்குமே தனிப் பிரியம் உண்டு. எங்களுக்காக அவர் நிச்சயமாக அரசியலுக்கு வருவார்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick