“ஜல்லிக்கட்டுக்கு பீட்டா... அனிதாவுக்கு ‘நீட்’டா?”

நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டத்தால் தகிக்கிறது தமிழகம்! விதவிதமாக நடக்கும் போராட்டங்களில் எல்லோரின் பார்வையைத் திருப்பியது சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் நடத்திய போராட்டம். 9-ம் தேதி நடந்த அந்தப் போராட்டக்களத்தில் இருந்து...

நிருபர்: ‘‘நீங்க எந்தக் கோரிக்கையை முன்னிறுத்திப் போராடுறீங்க?’’

மாணவி: “நாங்க அமைதியான முறையில நீட்டுக்கு எதிராகவும், அனிதா சாவுக்கு நீதி கேட்டும் போராட்டம் பண்றோம். ஆனா இந்தப் போலீஸ், எங்களை அடிச்சி இழுத்துட்டுப்போறாங்க. அங்க பாருங்கண்ணா... அங்க கைகட்டி வேடிக்கைப் பாத்துகிட்டு நிக்கிறதுதான் எங்க ஹெச்.எம். அவங்க எங்களுக்கு சப்போர்ட் பண்ணலைன்னாலும் பரவாயில்ல. ஆனா, அவங்களே எங்களை அடிக்கச் சொல்றாங்கண்ணா... நாங்க என்ன நாய்களா? முடியைப் பிடிச்சி இழுக்குறாங்கண்ணா. கன்னத்துல அறையுறாங்கண்ணா. எங்க உரிமையைக் கேட்டா அடிப்பாங்களா? சம்பளம் பத்தலைன்னா மட்டும் டீச்சர் போராடுறாங்க. அவங்க போராடுறதுக்கு உரிமை இருக்கும்போது மாணவர்கள் நாங்க போராட உரிமையில்லையா? இந்த போலீஸுக்கெல்லாம் நீட் தேர்வு வெச்சிருந்தா, இவங்க போலீஸ் ஆகியிருப்பாங்களா? அவங்களுக்கெல்லாம் குழந்தைங்க இல்லையா? அவங்களுக்கும் சேர்த்துத்தானே நாங்க போராடுறோம். ‘டி.சி கொடுத்துருவோம்’னு டீச்சரே மிரட்டுறாங்க. என்ன பண்ணாலும் எங்க போராட்டத்தைத் தொடருவோம்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்