மிஸ்டர் கழுகு: “சசியை நீக்கு... ஓ.பி.எஸ்ஸுக்கு ஆப்பு!” - எடப்பாடி எழுதும் புதிய ‘ராமாயணம்’

‘வானகரத்திலிருந்து வாட்ஸ்அப் அழைப்பில் உம்மோடு பேசுவேன்’ என்று கழுகாரிடமிருந்து மெசேஜ் வந்து விழுந்தது. அடுத்த சில நிமிடங்களில் அழைப்பு. பின்னணியில் அ.தி.மு.க பொதுக்குழுவில் தீர்மானங்கள் வாசிக்கப்படும் ஒலி கேட்க, கழுகாரிடம் கேள்விகளைப் போட்டோம்.

“அ.தி.மு.க பொதுக்குழு எப்படித் தொடங்கியது?”

“ஜெயலலிதா இருந்த வரையில், அந்தப் பொதுக் குழுவின் கெத்தே வேறு. இப்போது பொதுக்குழு முற்றிலும் வேறு மாதிரியாக இருந்தது. கடந்த முறை, சசிகலாவைப் பொதுச் செயலாளராக நியமிக்க நடந்த பொதுக்குழுவில், ஜெயலலிதாவின் படம் மேடைக்கு நடுவில் வைக்கப்பட்டிருந்தது. இந்தமுறை மேடையின் வலது ஓரம் எம்.ஜி.ஆரின் படமும், ஜெயலலிதா படமும் வைக்கப்பட்டிருந்தன. ஜெயலலிதா இருந்தபோது நடந்த பொதுக்குழுக்களில் சாப்பாடு மிகப் பிரசித்தம். ஆனால், இப்போது நடைபெற்ற பொதுக்குழுவில் காலை சாப்பாடே கிடையாது.”

“எத்தனை உறுப்பினர்கள் வந்திருந்தார்கள்?”

“2,140 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டது. மற்ற 630 பேர் தினகரன் ஆதரவாளர்கள் எனக் கட்டம் கட்டி ஒதுக்கிவிட்டார்களாம். அந்த அழைப்புக் கடிதமே இந்தமுறை குளறுபடியாக இருந்தது. கடிதத்தில் வழக்கமாக, ‘பொதுச் செயலாளர் உத்தரவின்படி பொதுக்குழு கூட்டப்படுகிறது’ எனக் குறிப்பிட்டு, அதில் ஜெயலலிதாவின் கையெழுத்தும் இருக்கும். ஆனால், இப்போது அனுப்பப்பட்ட கடிதத்தில், ‘யாருடைய உத்தரவின்படி பொதுக்குழு கூட்டப்படுகிறது’ என்ற விவரம் இல்லை. யாருடைய கையெழுத்தும் கடிதத்தில் இல்லை. வெறுமனே ‘நிர்வாகி’ எனப் போட்டு மொட்டைக் கடிதம் போல் இருந்தது. ஆனால், பெரும்பாலான உறுப்பினர்கள் வந்துவிட்டனர். ஸ்ரீபெரும்புதூர் எம்.பி ராமச்சந்திரன் தனது பொறியியல் கல்லூரியிலிருந்து மாணவர்களை அழைத்து வந்திருந்தார். அவர்கள்தான் பொதுக்குழு உறுப்பினர்களை மாவட்டவாரியாக கணக்கெடுத்தனர்.”

“பொதுக்குழு எத்தனை மணிக்குத் தொடங்கியது?”

“காலை 9 மணி முதல் 10.30 வரை எமகண்டம் என்பதால், அந்த நேரத்தில் எதுவும் நடக்கவில்லை. 10.45-க்கு செயற்குழு தொடங்கியது. அது ஒரு சம்பிரதாயத்துக்காக வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே நடந்தது. அதன்பிறகு பொதுக்குழு அரங்கத்துக்கு நிர்வாகிகள் சென்றனர். மேடையில் 57 நாற்காலிகள் போடப்பட்டு அனைத்து அமைச்சர்களும் மேடை ஏற்றப்பட்டனர். இதையெல்லாம்விட, மிக ரகசியமாக மற்றொரு வேலையும் நடந்தது.”

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்