வாசனைத் திரவியங்கள் யாருக்கு எது பெஸ்ட்?

ஏ.சிவகுமார், சரும மருத்துவர் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்ஹெல்த்

சோப்பு, ஷாம்பு, டூத்பேஸ்ட்போல பாடி ஸ்பிரே, பெர்ஃபியூம் போன்றவையும் அத்தியாவசியப் பொருள்களாகி விட்டன. பாடிஸ்பிரே (Body Spray), டியோடரன்ட் (Deodorant), ஆன்டிபெர்ஸ்பிரன்ட் (Antiperspirant), சென்ட் (Scent), பெர்ஃபியூம் (Perfu me) என ஏகப்பட்ட வாசனைப் பொருள்கள் வந்து விட்டன. சாக்லேட், லாவண்டெர், ஜாஸ்மின், ரோஸ் என எல்லா வாசனைகளிலும் கிடைக்கின்றன. சிலர், காலையில் ஒன்று மாலையில் ஒன்று என நேரத்துக்கு ஒரு வாசனைப் பொருளைப் பயன்படுத்துகிறார்கள். வாசனைத் திரவியங்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை? அவற்றில் சேர்க்கப்படும் ரசாயனங்களால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன? அவற்றைப் பாதுகாப்பான முறையில் எப்படிப் பயன்படுத்துவது?

சரும மருத்துவர் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஏ.சிவகுமார் விளக்குகிறார்.

“நம் உடலில் உள்ள தேவையற்ற உப்பு மற்றும் கழிவுகளை அகற்றவும், உடல் வெப்பநிலையைச் சமநிலையில் வைக்கவும் உடலில் தாமாகச் சுரக்கும் ஒரு திரவமே வியர்வை. நம் உடலில் எக்ரைன் (Eccrine), அபோக்ரைன் (Apocrine) என இரண்டுவகையான வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. எக்ரைன் சுரப்பியானது உடல் முழுவதும் பரவலாக இருக்கும். அக்குள் மற்றும் மடிப்புள்ள இடங்களில் அப்போக்ரைன் சுரப்பி காணப்படும். இவற்றை, ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன. எக்ரைன், ஒரு வயதிலேயே செயல்பட ஆரம்பித்துவிடும். அப்போக்ரைன், பருவ வயதிலிருந்துச் செயல்படத் தொடங்கும். இதனால்தான் பருவ வயதில், வியர்வை அதிகமாக வெளியேறுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்