இந்தியா

என். சொக்கன்

நவ்ரச்னா என்றால் தெரியுமா?

போரில்லாத வாழ்க்கைதான் நம் ஒவ்வொருவருடைய கனவு, எதிர்பார்ப்பு. யார்மீதும் வலியச்சென்று போரிடுவதில்லை என்பதுதான் இந்தியாவுடைய கொள்கையும். ஆனால், நம்முடைய எல்லைகளைப் பிறருடைய தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக நாமும் ராணுவத்துக்காகக் கணிசமாகச் செலவிடுகிறோம். அதன் ஒரு பகுதியாக, ‘நவ்ரச்னா’ என்ற திட்டத்தை அறிவித்தது DRDO (Defence Research and Development Organization) அமைப்பு. இதில் அடுத்த தலைமுறை ராணுவ யோசனைகள் பலவும் முன்வைக்கப்பட்டன. அதில் எடுத்துக்காட்டாக ஒன்றுமட்டும் இங்கே: எல்லைப் பாதுகாப்பு, மனித உயிருக்கு ஆபத்தான வேறு பணிகளில் ராணுவ வீரர்களுக்குப்பதிலாக இயந்திர மனிதர்களைப் பயன்படுத்தினால் என்ன? வெங்கடேஷ் குமார் த்விவேதி என்ற இளம் ஆய்வாளரின் யோசனை இது. நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் விரைவில் நிஜமாகவிருக்கிறது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick