“90 லட்சம் லிட்டர் பெட்ரோல் சேமித்திருக்கிறேன்!”

எலெக்ட்ரிக் பைக்தமிழ், படங்கள்: விநாயக்ராம்

சீனாவில் ஒவ்வோர் ஆண்டும் 4.2 கோடி எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாராகின்றன. நம் நாட்டில் ஆண்டுக்கு வெறும் 22,000 எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் தயாராகின்றன.

‘‘மார்க் மை வேர்ட்ஸ்... 2040-க்குள் பெட்ரோல்/டீசல் வாகனங்களே இல்லாத நிலைமை வரும். அப்போது சத்தமே இல்லாத சுத்தமான நாடாக இந்தியா மாறும்’’ என்கிறார் ஹேமலதா.

ஒவ்வோர் ஆண்டும் மே-11, தேசிய தொழில்நுட்ப தினத்தன்று ஹேமலதாவுக்கு டெல்லியில்தான் அப்பாயின்ட்மென்ட். குடியரசுத் தலைவர் அல்லது தொழில்நுட்ப அமைச்சர் என முக்கியப் புள்ளிகளின் முன்னிலையில் எலெக்ட்ரிக் அல்லது பேட்டரி சம்பந்தமான அறிமுகம் நடைபெறும். சென்ற ஆண்டு பிரணாப் முகர்ஜி தலைமையில் லித்தியம் ஐயன் பேட்டரியை அறிமுகப்படுத்தினார். இந்த ஆண்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், அதற்கான சார்ஜரை அறிமுகப்படுத்தினார்.

‘‘லித்தியம் ஐயன் பேட்டரி என்பது சாதாரண லெட் ஆசிட் பேட்டரியைவிட பல மடங்கு சிறப்பு வாய்ந்தது. எடை குறைவு, சார்ஜிங் நேரம் குறைவு, ரீ-சைக்கிளிங் திறன் என்று பல விஷயங்களில் லித்தியம் ஐயன் பேட்டரிதான் எலெக்ட்ரிக் வாகனங்களுக்குச் சரியான தேர்வு’’ என்கிறார் ஹேமலதா. ‘ஆம்பியர் வெஹிக்கிள்ஸ்’ என்று கூகுளில் சர்ச் செய்தால், ஹேமலதா குறித்த தகவல்கள் கொட்டுகிறது. ரியோ, மேக்னஸ், V60 என்று பேட்டரி ஸ்கூட்டர்களைத் தயார் செய்து, டூ-வீலர் மார்க்கெட்டை எலெக்ட்ரிக் மயமாக்குவதுதான் ஹேமலதாவின் லட்சியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick