கேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையா?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
காளிகாம்பாள் கோயில்’ சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர்

? கோயில் மூடியிருக்கும்போது சுவாமியை வழிபடலாமா? சிலர், அப்படிச் செய்யக்கூடாது என்கிறார்களே?

- பா.செந்தில்குமார், வேலூர்


பிரபஞ்ச சக்தியை நமக்கு அளிக்கக் கூடிய புனிதமான இடம் ஆலயம். எப்போதும் எல்லோருக்காகவும் வழிபாடு நடைபெறும் இடம் அது. அங்கே, சுவாமியின் முன்பாக திரை போடப் பட்டிருக்கும்போதும், கோயில் மூடியிருக் கும்போதும் வழிபடுவதைத் தவிர்ப்பது அவசியம். சிலநேரம், பயணத்தின்போது மூடியிருக்கும் கோயிலைக் கண்டு பக்தி மேலிட வணங்குகிறோம் எனில், அதில் தவறேதும் இல்லை.

பொதுவாகவே நமக்குப் பழக்கமான ஒன்றை மாற்றிக்கொள்வது கடினம். நாம் கடவுளைக் கண்டாலோ, அவர் சிறப்பாக உறையும் ஆலயத்தைப் பார்த்தாலோ, நம்மையுமறியாமல் கைகூப்பி வணங்குவது நமது பழக்கம். இப்படிச் செய்பவர்கள் ஆலயம் மூடியிருக்கிறதா, திறந்துள்ளதா என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள், அவர்கள் உள்ளே உறையும் இறைவனை மனதில் ஏற்றி வழிபடுவார்கள். இறைவன் மீதான அதீத பக்தியே இதற்குக் காரணம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick