மிஸ்டர் கழுகு: ஜெயா டி.வி-க்கு தடை! - சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு!

‘‘டெல்லி போவதாகச் சொல்லியிருந்தேன் அல்லவா... அது இதற்காகத்தான்’’ என்று சொல்லி டேபிளில் ஒரு நீதிமன்ற உத்தரவை வைத்தார் கழுகார்.

‘‘என்ன இது?’’ என்றோம்.

‘‘ஜெயா டி.வி-யை மொத்தமாகத் தடை செய்து, சசிகலாவுக்கு செக் வைக்க நினைக்கிறது மத்திய அரசு. அந்தக் கதையைச் சொல்லும் உத்தரவுதான் இது.’’

‘‘விளக்கமாகச் சொல்லும்!’’

‘‘ஜெயா டி.வி., ஜெயா பிளஸ், ஜெயா மேக்ஸ் மற்றும் ஜெ. மூவி ஆகிய நான்கு சேனல்களை நடத்துவது Mavis Satcom Ltd என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தில் சுமார் 80 சதவிகிதம் பங்குகளை வைத்திருப்பவர் சசிகலா. எனவே, இந்த சேனல்களுக்கு தகவல் ஒளிபரப்புத் துறையிலிருந்து ஒளிபரப்பு அனுமதி பெறுவது, உள்துறையிலிருந்து பாதுகாப்பு அனுமதி பெறுவது என எல்லாவற்றுக்கும் சசிகலா பெயரிலேயே விண்ணப்பம் செய்யப்படும். மே 15-ம் தேதி மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திலிருந்து இந்த நிறுவனத்துக்கு ஒரு கடிதம் வந்தது. ‘உங்களின் நான்கு சேனல்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அனுமதி தர மறுத்துவிட்டது. எனவே, தகவல் ஒளிபரப்புத் துறை வசம் இருக்கும் சேனல்கள் பட்டியலிலிருந்து இந்த நான்கு சேனல்களையும் நீக்கிவிட்டோம். உடனடியாக இவற்றின் ஒளிபரப்பை நிறுத்துங்கள்’ என்று அந்தக் கடிதத்தில் இருந்தது. அதைப் பார்த்து ஜெயா டி.வி அலுவலகத்தில் இருந்தவர்கள் ஆடிப் போய்விட்டார்கள்.’’

‘‘எதனால் இப்படி ஆனதாம்?’’

‘‘ஜெயா டி.வி வட்டாரத்தில் விசாரித்தேன். சேனல் ஒளிபரப்புக்குத் தேவைப்படும் டெலிபோர்ட் லைசென்ஸைப் புதுப்பிக்க 2017-ம் ஆண்டில் விண்ணப்பம் செய்துள்ளனர். பல மாதங்களாக பதிலே இல்லையாம். திடீரென இப்படி தடை உத்தரவு வந்திருக்கிறது. 30.06.2015 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு கொள்கை முடிவு எடுத்திருக்கிறது. ‘ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் தண்டனை பெற்றவர்கள் யாராவது ஒளிபரப்பு நிறுவனங்களின் பங்குதாரர்களாக இருந்தால், அது நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்புக்கு ஆபத்து. அப்படி இருக்கும் நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு அனுமதி தருவதில்லை’ என்பதே அந்தக் கொள்கை முடிவு.’’

‘‘இதை வைத்துத்தான் சசிகலாவுக்கு செக் வைக்கிறார்களா?’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick