சுட்டி ஸ்டார் நியூஸ்!

காகித வாட்டர் பாட்டில்!

பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக உலகம் முழுவதும் நல்ல தொழில்நுட்பத்துடன் புதிய பொருள்கள் உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில், காகிதக் குடிநீர் பாட்டில்களை வடிவமைத்துள்ளனர், இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள். இதில் குடிநீரை அடைத்து விநியோகித்தாலும், நீரின் தன்மை கெடாது. பயன்படுத்திக் குப்பையில் போட்டால், சில மாதங்களில் மட்கிவிடும். மறுசுழற்சி காகிதத்தில் தயாராகும் இந்தப் பாட்டில்களின் உட்பகுதியில், சில தாவரங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருள் பூசப்பட்டிருக்கும். எனவே, நீரில் காகிதம் ஊறி பாட்டில் பிய்ந்துவிடாது. இந்தப் பாட்டில் விற்பனையில் கிடைக்கும் லாபம் அனைத்தும் ஓர் ஆப்பிரிக்கா அமைப்புக்கு நன்கொடையாக அனுப்பப்படுகிறது என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்