மியூச்சுவல் ஃபண்ட்... டிவிடெண்ட் ஆப்ஷன் லாபமா?

ம் நாட்டில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்று வரும்போது, குரோத் ஆப்ஷனைவிட டிவிடெண்ட் ஆப்ஷனையே விரும்பித் தேர்ந்தெடுக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம், குறிப்பிட்ட காலத்துக்கொருமுறை கொஞ்சம் பணம் திரும்பக் கிடைக்கும் என்பதுதான். தவிர, மியூச்சுவல் ஃபண்ட் விற்கும் விநியோகஸ்தர்கள் டிவிடெண்டை ஒரு முக்கியமான விஷயமாக முதலீட்டாளர்களிடம் எடுத்துச்சொல்லி, அதைத் தேர்ந்தெடுக்க வைத்துவிடுகிறார்கள். பல மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்டுகள், “இந்த ஃபண்ட் தொடர்ந்து 20 வருட காலமாக டிவிடெண்ட் தந்துவருகிறது. யூனிட்டுக்கு ரூ.5-க்குக் குறையாமல் டிவிடெண்ட் தந்துவருகிறது’’ என்று சொல்லி, டிவிடெண்ட் ஆப்ஷனில் முதலீடு செய்ய வைத்துவிடுகிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!