கர்நாடக அரசின் கபட நாடகம்... ஜால்ரா தட்டும் தமிழக அரசு!

காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டம்பிரச்னைகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம.அரவிந்த்

நீண்ட இழுத்தடிப்புக்குப் பிறகு மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், கடந்த ஜூலை 2-ம் தேதி புதுடெல்லியில் நடைபெற்றது. ஆணையத்தின் தலைவரும் மத்திய நீர்வளத்துறை ஆணையருமான மசூத் ஹூசைன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாட்டின் சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகரன் கலந்துகொண்டார். மேலும், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

நான்கு மணிநேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் தெரிவித்த கருத்துகள், தமிழக மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இல்லை என்பதால், சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்