நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 19

போப்பு, மருத்துவ எழுத்தாளர்குடும்பம்

பொதுவாகப் பழங்களை அவற்றின் இயற்கையான வடிவத்தில் அப்படியே சாப்பிடுவதுதான் சிறந்தது. அப்போதுதான் அவற்றின் முழுப் பலன்களையும்  பெறமுடியும்.  முடிந்தால் தோலுடன் சாப்பிடவேண்டும். மாம்பழம் சிலருக்குச் செரிக்கக் கடினமாக இருக்கலாம். மாவின் இளங்கசப்பும் இளந்துவர்ப்பும் கூடிய தோல்,  செரிமானத் திறனை அதிகரிக்கும். 

இயற்கைப் பொருள்கள் ஒவ்வொன்றும் தமக்குரிய சமன்படுத்ததுலையும் இயற்கையாகவே கொண்டுள்ளன. அரிசி, நம் உடலுக்குத் தேவையான எரிசக்தியைத் தரக்கூடிய இனிப்புச் சுவையை முதன்மையாகக் கொண்டிருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் அரிசியை அல்லது சோற்றை நிதானமாக மென்று சுவைக்கிறபோது முதலில் இனிப்புச்சுவை வெளிப்படும். தொடர்ந்து சுவைக்கச் சுவைக்க அதனுள்ளிருந்து  கசப்பு, துவர்ப்பு, உப்பு, காரம் என அனைத்துச் சுவைகளும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுவதை உணரமுடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!