மனிதர்களைப் படியுங்கள்... மகத்தான சாதனைகள் புரியலாம்! - இயக்குநர் பாண்டிராஜ்

நேர்காணல்சுட்டி ஸ்டார்ஸ்

‘பசங்க' என்ற செம ஜாலியான படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து, இன்று `கடைக்குட்டி சிங்கம்' வரை பல ஹிட் படங்களைக் கொடுத்தவர், பாண்டிராஜ். இந்த ஆண்டு, `பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்' பயிற்சித் திட்டத்தின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட இயக்குநரிடம் நாங்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்...
   
``முதல் படமாக சின்னப் பசங்களை வெச்சு எடுக்கணும்னு ஏன் தோணுச்சு?''

``ஓர் இயக்குநர் தனக்கான தனி அடையாளத்தை முதல் படத்தில் வெளிப்படுத்தணும். அப்போ, பார்த்தீங்கன்னா, என் நண்பரான இயக்குநர் சிம்புதேவன், `இம்சை அரசன் 23-ம் புலிகேசி'னு வடிவேல் சாரை ஹீரோவாக்கி மன்னர் காலத்துப் படமாக ஒரு காமெடி படம் பண்ணினார். அதுவரை, வெலியாகிக்கொண்டிருந்த படங்களின் வகைகளிலிருந்து ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. மக்கள் ரசிச்சு ஹிட் ஆக்கினாங்க. அப்படி, ஒவ்வொரு புது இயக்குநரும் ஒரு புது லைனில் அசத்தினாங்க. நாம என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். அப்போ, குழந்தைகள் படம் வர்றதே ரொம்ப அபூர்வமா இருந்துச்சு. அப்படியே, குழந்தைகள் படம்னு சொல்லிட்டு வந்தாலும், அதில் பெரியவங்க கேரக்டர்கள்தான் அதிகம் இருக்கும். குழந்தைகளையே மையமாக்கி, அவங்களின் சந்தோஷங்கள், பிரச்னைகளைப் பிரசாரமா இல்லாமல் ஜாலியா சொல்ல முடிவுபண்ணினேன். `பசங்க' பிறந்துச்சு."

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick