ஆடிப்பட்டம் தேடி விதை! - விதைகளுக்கு அரசு வழங்கும் 50% மானியம்!

மானியம்த.ஜெயகுமார்

மிழ்நாடு வேளாண்மைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ‘தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை’ (TANSEDA) மூலமாக, தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து வேளாண் வட்டாரங்களிலும்... நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் ஆகிய பயிர்களின் விதைகள் மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, வேளாண்மைத் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தியிடம் பேசினோம். “தமிழ்நாடு முழுவதுமுள்ள 385 வேளாண் வட்டாரங்களில் (பிளாக்), 850 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மையங்களில் விவசாயிகளுக்காக 50% முதல் 60% வரை மானிய விலையில் விதைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் மற்றும் பருத்தி ஆகிய பயிர்களின் விதைகள் இந்த மையங்களில் மானிய விலையில் கிடைக்கும். அந்தந்தப் பகுதியில் என்னென்ன பயிர்கள் அதிகம் விளையுமோ அந்தப் பயிர்களுக்கு முன்னுரிமை அளித்து, அந்தப் பயிர்களோடு மற்ற விதைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையங்களில் சிறு மற்றும் குறு விவசாயிகள் (5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருப்பவர்கள்) மட்டுமே மானிய விலையில் விதைகளை வாங்க முடியும். மற்ற விவசாயிகள் முழுவிலையில் விதைகளை வாங்கிக் கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick