பாரம்பர்ய விதையில் பலன் தரும் மாடித்தோட்டம்!

மாடித்தோட்டம்துரை.நாகராஜன், படங்கள்: வ.யஷ்வந்த்

மாடித்தோட்டம் மூலம் காய்கறிகள், கீரைகள் என உற்பத்திச் செய்பவர்களில் பெரும்பாலானோர் விதைக்கடைகளில் கிடைக்கும் வீரிய ரக விதைகளைத்தான் விதைத்து வருகிறார்கள். காரணம் இத்தகைய விதைகள் அனைத்து இடங்களிலும் கிடைக்கும் என்பதுதான். ஆனால், நாட்டு ரக விதைகளைத் தேடிப்பிடித்து அவற்றை  மாடித்தோட்டத்தில் விதைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அத்தகையோரில் ஒருவர்தான், சென்னை, மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த நீலா சுகன்யா. ஒரு காலை வேளையில் மாடித்தோட்டச் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருந்தவரை சந்தித்தோம்.

“ஒரு வருஷம் முன்னாடி விளையாட்டா 20 தொட்டிகளை வெச்சு மாடித்தோட்டத்தை ஆரம்பிச்சேன். இப்போ 80 தொட்டிகள் அளவுக்குப் பெருகிடுச்சு. அதைவிட மாடித்தோட்டம் என்னை விவசாயியாவும் மாத்திடுச்சு. ஆமாம், மாடித்தோட்டத்துல மூலமா வந்த விவசாய ஆசையால, நண்பர்களோடு சேர்ந்து ஈ.சி.ஆர்-ல நிலம் வாங்கி விவசாயம் செஞ்சுட்டுருக்கேன். மாடித்தோட்டத்துலயும் சரி, நிலத்துலயும் சரி... வீரிய ரக விதைகளைப் பயன்படுத்துறதில்லை. நாட்டு ரக விதைகளைத்தான் பயன்படுத்துறேன். அங்க எள் போட்டு அறுவடை முடிஞ்சு காய்கறி போட்டேன். அதுவும் இப்போ அறுவடைக்கு வந்துடுச்சு. இங்க மாடித்தோட்டத்துல வாரம் மூணு நாளுக்குத் தேவையான காய்கறிகள் கிடைச்சுடுது” என்ற நீலா சுகன்யா மாடித்தோட்ட செடிகளைக் காட்டிக்கொண்டே பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick