விதை முதல் விளைபொருள் விற்பனை வரை...வழிகாட்டும் ஓசூர் டி.வி.எஸ் நிறுவனம்!

வழிகாட்டல்த.ஜெயகுமார், படங்கள்: க.தனசேகரன்

யற்கை விவசாயத்தின் முதல்படியே பாரம்பர்ய விதைகளைக் கையில் எடுப்பதுதான். அதன்படி, பாரம்பர்ய விதைகளைப் பயிர் செய்யச் சொல்லி அறிவுறுத்துவதோடு இயற்கை விவசாயம் செய்வதற்கான பயிற்சி, விளைபொருள் விற்பனை போன்ற விஷயங்களிலும் உதவி, விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு வழி செய்து தருகிறது, ‘டி.வி.எஸ்’ நிறுவனத்தின் கீழ் இயங்கும் ‘டி.எஸ்.சீனிவாசன் கிராமப் பயிற்சி மையம்’ (T.S.Srinivasan Centre for Rural Training TSS-CRT).

இம்மையம், கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பத்தலப்பள்ளி பகுதியில் ‘டி.வி.எஸ் அகாடமி பள்ளி’க்கு அருகே அமைந்துள்ளது.

ஒரு காலைப்பொழுதில் மையத்துக்குள் நுழைந்தோம். இயற்கைக் காய்கறிகள், பழங்களை ‘பேக்’ செய்து கொண்டிருந்தனர், பணியாளர்கள். அப்பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த மையத்தின் ஆலோசகர் ராஜகோபாலன் நம்மை வரவேற்றுப் பேச ஆரம்பித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick