நயன்தாராவுக்கு கோபம் பிடிக்காது! | Secrets of dazzling queen nayanthara - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/09/2018)

நயன்தாராவுக்கு கோபம் பிடிக்காது!

ஸ்டார்

* நயன்தாரா சினிமாவுக்கு வராமலிருந் திருந்தால், சார்ட்டர்ட் அக்கவுன்டன்டாகவோ, நடனக் கலைஞராகவோ ஆகியிருப்பாராம். எட்டு வயதிலிருந்து பரதம் கற்றுக் கொள்ளத் தொடங்கியிருந்தாலும், சில காரணங்களால் அரங்கேற்றம் வரை செல்ல முடியவில்லை. கூடிய விரைவில் மேடையில் பரதம் ஆட வேண்டும் என்பது நயனின் கனவுகளுள் ஒன்று!

* வீட்டிலிருப்பவர்கள் இவரைச் செல்லமாக ‘மணி’ என்றும் நட்பு வட்டாரத்தில் ‘டயானா’ என்றும் அழைக் கிறார்கள்.

* நயன்தாராவின் ஃபேஷன் பட்டியலில் அதிகம் இருப்பவை பிளாட்டினம் நகைகள், காட்டன் பட்டுப்புடவைகள் மற்றும் பிரவுன் நிற காலணிகள்.