ரங்க ராஜ்ஜியம் - 12 | Srirangam: Spiritual history - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/09/2018)

ரங்க ராஜ்ஜியம் - 12

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

இந்திரா சௌந்தர்ராஜன் - படம்: என்.ஜி.மணிகண்டன்

சோழ தேசத்தின் ஒரு பாதியோடு பாதாள நதியாகிவிடும் காவிரியை எண்ணி சோழமன்னன் ஒரு நாள் வெகு நேரம் சிந்தித்தான். ‘பாயும் புனல் இப்படியா பாதாளத்தில் விழுந்து பாழாகவேண்டும்? சமுத்திர சம்பந்தம் இல்லாத நதிகள் பாவத்தைப் போக்கும் சக்தியற்றவையாகி விடுகின்றன. சமுத்திரக் கலப்பின்போதுதான் அவை பெரும் சக்தி படைத்தவையாகின்றன. எனவே, காவிரி குறித்து யாது செய்வது ’ என்று எண்ணியவன், கொட்டையூர் எனும் ஆமணக்குச் செடி விளையும் ஊரில், ஓர் ஆமணக்குச் செடியின் அருகில் தவம் செய்யும் ஏரகண்டரிடம் சரண் புகுந்தான்.