விதைநெல் தட்டுப்பாடு... வேதனையில் விவசாயிகள்! | Scarcity for Rice seeds in Kaveri delta regions - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/09/2018)

விதைநெல் தட்டுப்பாடு... வேதனையில் விவசாயிகள்!

பிரச்னை

காவிரி டெல்டா பகுதிகளில் முன்பட்டச் சம்பாச் சாகுபடி மேற்கொள்ளும் வகையில்... கடந்த ஜூலை 18-ம் தேதி கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முன்பட்டச் சம்பாச் சாகுபடிக்கு நீண்டகால ரகமான, ‘சி.ஆர்-1009’ நெல் ரகம்தான் ஏற்றது. ஆனால், இந்த ரக விதைநெல் கிடைக்காமல் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள், விவசாயிகள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ‘தஞ்சை மாவட்டக் காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க’த்தின் துணைச்செயலாளர் சுகுமாறன், “ரொம்ப வருஷமாவே காவிரியில் தண்ணீர் வராததால சம்பாச் சாகுபடி நடக்கவேயில்லை. விவசாயிகள் ரொம்பச் சிரமத்துல இருந்தோம். இந்த வருஷம், ஜூலை மாசமே மேட்டூர் அணை நிரம்பிட்டதால, தண்ணீர் வர ஆரம்பிச்சது. தண்ணீரைப் பார்த்த சந்தோஷத்துல முன்பட்டச் சம்பா நெல் சாகுபடிக்கான வேலைகளை ஆரம்பிச்சோம். இந்தப்பட்டத்துக்கு ஜூலை 15-ம் தேதியில இருந்து ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள்ள விதைச்சாகணும். இதுக்கு 155 நாள்கள் வயசுள்ள நீண்டகால ரகமான சி.ஆர்-1009 ரகம்தான் ஏற்றது. இதுலதான் பூச்சி, நோய்த்தாக்குதல் அதிகமா இருக்காது. நெல்மணிகள் நல்லா திரட்சியாக இருக்கும். இந்தப்பட்டத்துல விதைக்கிறப்போ, நல்ல மகசூலும் கிடைக்கும்.