2 ஏக்கர்... 75 நாள்கள்... ரூ. 58,000 - நல்ல வருமானம் தரும் நாட்டு எள்! | Profitable country Gingelly yielding - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/09/2018)

2 ஏக்கர்... 75 நாள்கள்... ரூ. 58,000 - நல்ல வருமானம் தரும் நாட்டு எள்!

மகசூல்

சுமைப்புரட்சிக்குப் பிறகு அனைத்துப் பயிர்களிலுமே வீரிய மற்றும் ஓட்டு ரக விதைகள்தான் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. பாரம்பர்ய ரகங்களின் மகத்துவம் அறிந்தவர்கள் மட்டுமே இன்னமும் நாட்டு ரக விதைகளைப் பயன்படுத்திச் சாகுபடி செய்து வருகிறார்கள். அந்த வகையில் தொடர்ச்சியாக நாட்டு ரக விதையைப் பயன்படுத்தி எள் சாகுபடி செய்து வருகிறார், திருச்சி மாவட்டம், லால்குடிக்கு அருகிலுள்ள நெருஞ்சாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார்.

இவர் 2 ஏக்கர் பரப்பில் இயற்கை முறையில் நாட்டு எள் சாகுபடி செய்து வெற்றிகரமாக மகசூல் எடுத்துள்ளார். ஒரு பகல் பொழுதில் ராம்குமாரைச் சந்தித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் மகிழ்ச்சியாக வரவேற்றுப் பேச ஆரம்பித்தார்.