ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி..! | Ulagalantha Perumal Temple in Kanchipuram - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/09/2018)

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி..!

லகத்தில் செய்யக்கூடாத இழிவான ஒரு செயல் இருக்கிறதென்றால், அது நிச்சயம் யாசகமாகவே இருக்க முடியும். ஆம்! அதனால் தான் ஒருவன் எத்தகைய நிலையில் இருப்பவ னாயினும், அவன் யாரிடமாவது எதையேனும் யாசகம் பெறவேண்டிய நிலைக்குத் தள்ளப் படும்போது தன்னைக் குறுக்கி, கைகட்டி நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

அவன் இறைவனே ஆனாலும்கூடத் தன்னைக் குறுக்கிக்கொள்ளவே செய்கிறான். அதற்கு வாமன அவதாரத்தைவிடவும் ஒரு சாட்சி வேண்டுமா என்ன?

மகாவிஷ்ணு வாமனனாக அவதரித்தபோது, குறுகிய வடிவம் கொண்டார். தான் யாசகம் பெறப்போகிறோம் என்பதற்காக மட்டுமல்ல; அவர்,  யார் நன்மைக்காக அவதாரம் எடுத் தாரோ அந்த தேவர்களின் வஞ்சக எண்ணத் தினாலும்தான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க