கேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காக?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

? சூரிய நமஸ்காரம் சிறப்பாகச் சொல்லப்படுவது ஏன், அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன?

- ராமகிருஷ்ணன், சென்னை - 90

`நமஸ்காரம்' என்பதே அகங்காரத்தைக் குறைக்கும் செயல். நம் செயல் என்று எதுவுமில்லை. அனைத்தும் தெய்வச் செயல் என்பதன் அடையாளம்தான் நமஸ்காரம்.

நம் கண்களுக்குப் பிரத்யட்சமாகத் தெரியும் கடவுள் சூரிய பகவான். சகல உயிர்களுக்கும் அன்னம் அளிப்பவன் சூரியன் என்பதால், சூரியபகவானுக்கு நம் நன்றியைத் தெரிவிக்கும் ஒரு முறைதான் சூரிய நமஸ்காரம். பூமியின் அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியபகவானை வழிபடுவதன் மூலம், அனைத்து தேவர்களையும் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்கிறது வேதம். சூரிய நமஸ்காரம் நம் உடல், அறிவு, மனம் ஆகியவற்றுக்கு ஆற்றலை அளிக்கிறது.

அதிகாலை சூரிய ஒளி, நமக்கு எண்ணற்ற ஆரோக்கியப் பலன் களை அளிப்பதாக இன்றைய மருத்துவம் வியப்புடன் பரிந்துரைக் கிறது. சூரியனின் ஆற்றலை நாம் முழுமையாகப் பெற்று நிறை வான வாழ்க்கை வாழ சூரிய நமஸ்காரம் அவசியமாகிறது.சூரியனை வழிபட எளிய மந்திரங்களும் வழிபாட்டு முறைகளும் பெரியோர்களால் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி, சூரியனின் அனுக்கிரகத்தை சூரியனின் கிரணங்கள் மூலமாக நாம் பெறவேண்டும்.

அனைத்து இயக்கங்களுக்கும் மூலாதாரமான சூரியனை வழிபடுவதென்பது வெறும் சடங்கு அல்ல. அது, நாம் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நல்லதொரு மார்க்கம்; எந்தச் செலவுமின்றி நாம் ஆரோக்கியம் பெறுவதற்கானச் சிறப்பு வழி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick