ஏன்... ஏன்? தெரிவோம்... தெளிவோம்! - 1 | FAQ in Agriculture and its answers - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/09/2018)

ஏன்... ஏன்? தெரிவோம்... தெளிவோம்! - 1

புதிய தொடர்

செலவைக் குறைக்கும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு!

கேள்வியில் இருந்துதான் கண்டுபிடிப்புகள் பிறக்கின்றன. ‘ஏன்’ என்ற இரண்டெழுத்துக்கான பதில் மூலம் மனிதக்குலம் பல்வேறு வளர்ச்சிகளை அடைந்துள்ளது. வேளாண்மையிலும் உழவிடுவது ஏன், எருவிடுவது ஏன், பூச்சிகள் வருவது ஏன், அவற்றை விரட்டுவது ஏன் என கேள்விகள் எழுந்ததால்தான் பல விடைகள் கிடைத்தன. தொடர்ந்து இதுபோன்ற கேள்விகள் விவசாயம் சார்ந்த நம் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தி வருகின்றன. தற்போது விவசாயத்தில் புதிய புதிய இடர்ப்பாடுகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அவை ஏன் வருகின்றன, ஏன் இப்படி நடக்கின்றன என்பதை அறியும் வகையில் இந்தப் பகுதியில் அதற்கான விடைகள் கிடைக்கும்.

பருவநிலை மாற்றம் காரணமாகப் புதிது புதிதான இடர்ப்பாடுகள் வந்து கொண்டேயிருக்கின்றன. இதனால், பயிர்களும் புதுப்புது பூச்சி, நோய்களால் பாதிக்கப் படுகின்றன. அவற்றைச் சமாளிப்பதற்கான புதுப்புது தொழில்நுட்பங்களும் அறிமுகமாகிக் கொண்டுதான் இருக்கின்றன. பூச்சி மேலாண்மைக்காக உலகளவில் சிறந்த தொழில்நுட்பமாக இருப்பது, ‘ஐ.பி.எம்’ எனப்படும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை. இது ஏன் கொண்டுவரப்பட்டது. நமது விவசாயிகளிடம் இத்தொழில்நுட்பம் இன்னமும் முழுமையாகச் சென்று சேரவில்லை ஏன் என்பதைப் பார்ப்போம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க