`கண்ணனைப் பிடிக்கும்... ஏன் தெரியுமா?’ | Crazy Mohan Talk About Spiritual Things of Krishna - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/09/2018)

`கண்ணனைப் பிடிக்கும்... ஏன் தெரியுமா?’

‘`பகவான் கிருஷ்ணரை யாருக் குத்தான் பிடிக்காது? எல்லோருக் கும் பிரியமான கிருஷ்ணரிடம் எனக்கும் பிரியம் ஏற்பட்டதில் ஆச்சர்யமே இல்லை. கண்ணன் ரொம்ப ஃப்ரெண்ட்லி. அதனால தான் பாரதியார் கண்ணனைப் பாடும்போது, குருவாக, நண்ப னாக, சேவகனாக, காதலனாக, சீடனாக... என்று கண்ணனின் மகிமையை பல வகைகளில் அனுபவித்துப் பாடியிருக்கார்’’

- பகவான் கண்ணனைப் பற்றி உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார் கிரேஸிமோகன்.

இவருடைய வசனப் படைப்பு கள், நாடகங்கள்... குறிப்பாக `சாக்லேட் கிருஷ்ணா’ நாடகம் குறித்தெல்லாம் எல்லோருக்குமே தெரியும். ஆனால், கிருஷ்ணனுக்கு 4000 வெண்பாக்கள் பாடியிருக் கிறார் கிரேஸிமோகன் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.

அதுபற்றி பேசலாம் என்று நேரில் சென்றால், அவருக்கே உரிய பாணியில் சிரிப்பாக சிலிர்ப்பாக பகிர்ந்து கொண்டார், கிருஷ்ணன் மீதான தனது பக்தியை, அதற்கான காரணங்களை. அவை அப்படியே இங்கே உங்களுக்காக...

நீங்க எப்படி பீல் பண்றீங்க