ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்!

முப்பொழுதும் நம்மைத் தப்பாமல் காக்கும் விநாயகர் அவதரித்த தினம், ஆவணி மாதம் சுக்லபட்ச சதுர்த்தி திருநாள். இதையே விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடுகிறோம்.

‘பிடித்துவைத்தால் பிள்ளையார்’ என்பார்கள் பெரியோர்கள். ஆம்! பெரிதினும் பெரிதானவர் விநாயகர். எனினும், பக்தர்களுக்கு எளியவர் அவர். மண், மஞ்சள், வெல்லம், மாவு... என கிடைக்கும் பொருளில், பிள்ளையாரை நினைத்துப் பிடித்துவைத்தால் போதும், அதில் கனஜோராக எழுந்தருளிவிடுவார் கணபதி. அவருக்கு விரிவான வழிபாடுகள் தேவை யில்லை; எளிதில் கிடைக்கும் அறுகம்புல்லைக் கொண்டு அன்போடு அர்ச்சித்தாலே போதும், அதில் அகமகிழ்ந்து அருள்வாரி வழங்குவார் அந்த வள்ளல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick