தில், த்ரில்... சாகசம்!

விசிட்

பூங்காவுக்குச் சென்றால் விளையாட்டு, அரட்டை என்றுதான் பொழுதைக் கழிக்கிறார்கள். அதில் த்ரில்லாக ஒன்றும் இல்லையே என்று நினைத்த இந்த பார்க் நிர்வாகிகள், புதுமையான ஐடியா ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள செயின்ட் அகஸ்டின் அலிகேட்டர் ஃபார்ம் ஜுவாலஜிக்கல் பார்க்கில் (St. Augustine Alligator Farm Zoological Park) பார்வையாளர்களுக்கு த்ரில்லிங் அனுபவம் காத்திருக்கிறது. அங்கு,  விதவிதமான சாகச விளையாட்டுகள் உள்ளன. அதையும் தவிர, ஸ்பெஷலாக  க்ரொக்கடைல் ஜிப் லைன் (Zip line) கிராஸ், எல்லோரையும் பிரமிக்கவைக்கிறது.

இங்குள்ள செயற்கைக் குளத்தில் முதலைகளை வளர்த்துவருகிறார்கள்.  குளத்துக்குமேலே பாதுகாப்பான உயரத்தில், ஜிப் லைன் கிராஸ் அமைக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு தில் இருந்தால், அந்த ஜிப் லைன் மூலம் முதலைகளை கிராஸ் செய்யலாம். அப்படி நீங்கள் செல்லும்போது, முதலைகள் உங்களைப் பிடிக்க, மேலே குதிக்கும். அந்த த்ரில் அனுபவம் பற்றி சொல்லவே தேவையில்லை.

கீழே விழுந்துவிடுவோமோ என்று பயப்பட வேண்டியதில்லை. எல்லாப் பாதுகாப்பு களோடுதான் முதலைகளை கிராஸ் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள் நிர்வாகிகள். முதலைகளுடன் போட்டோ எடுத்துக்கொள்ளவும், அதற்கு உணவு கொடுக்கவும் செய்யலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்