நைனிகா... சமர்த்தா, குறும்பா? - தெறி பேபியுடன் ஒரு ஜாலி மீட் | Interview with Theri Baby Nainika - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/09/2018)

நைனிகா... சமர்த்தா, குறும்பா? - தெறி பேபியுடன் ஒரு ஜாலி மீட்

பேட்டி-2

‘தெறி’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படங்களில் சுட்டித்தனமான நடிப்பால் லைக்ஸ் அள்ளியவர், நைனிகா. படிப்பு, நடிப்பு இரண்டிலும் கலக்கும் க்யூட் பேபியுடன் ஒரு ஜாலி சந்திப்பு. 

“நைனிகாவுக்குப் பிடிச்ச விஷயங்கள் என்னென்ன?”

“விளையாட ரொம்பப் பிடிக்கும். காலையில் எழுந்ததுமே அம்மாகிட்ட, ‘விளையாடலாமா மம்மி?’னு கேட்பேன். ‘காலங்காத்தால ஆரம்பிச்சுட்டீயா?’னு செல்லமா கோபிச்சுப்பாங்க. விளையாட்டோடு ஆரம்பிச்சா, அது எனக்கு சூப்பரான நாளாக அமையும்.”

“பிடிச்ச விளையாட்டுகள்...”

“பேட்மிட்டன், ஹைடு & ஸீ.”