விடுதலைக்கு விளக்கேற்றலாமா?

‘விடுதலைக்கு விளக்கேற்றுவோம்’ என்று பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலைக்காக வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி, அதைப் படம் எடுத்துச் சமூக ஊடகங்களில் பகிர்வோம் என்பது உள்பட சில வழிமுறைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், தன் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்களில் சமீபத்தில் பகிர்ந்திருந்தார். மேலும், ‘திரையரங்கிற்குச் செல்வோர் ஏழு மணிக்குத் தம் மொபைலில் வெளிச்சத்தைப் பாய்ச்சுங்கள். சமய நம்பிக்கை கொண்டோர் சிறப்பு வழிபாடுகளைச் செய்யுங்கள்’ என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனால், அவர்மீது இணையத்தில் விமர்சனங்கள் எழுந்தன.

இதுகுறித்து ரவிக்குமாரிடம் கேட்டோம். ‘‘தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளதால், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை இப்போது கவர்னரின் கையில் உள்ளது. கவர்னர் விரைந்து முடிவெடுக்குமாறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. தமிழக மக்கள் இந்த ஏழு பேரின் விடுதலையில் அக்கறையுடன் இருக்கிறார்கள் என்ற செய்தி கவர்னருக்குத் தெரியவந்தால், அவர் ஒரு சாதகமான முடிவை விரைந்து எடுக்கக்கூடும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick