பாலியல் தொந்தரவு ஆசிரியர்... பரிந்துவந்த அமைப்புகள்! | Teacher Sexual harassment to 3rd standard child - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/09/2018)

பாலியல் தொந்தரவு ஆசிரியர்... பரிந்துவந்த அமைப்புகள்!

சேலம் பரபரப்பு

சேலத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியைப் பாலியல் துன்புறுத்தல் செய்துவந்த வகுப்பு ஆசிரியருக்குச் சரமாரியாகச் செருப்படி விழுந்த சம்பவம், வாட்ஸ்அப்பில் வீடியோவாக வைரலானது. போக்ஸோ சட்டத்தில் அந்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டார். அதன் பிறகு, பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின் பெற்றோர்மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதன் பின்னணியில் பி.ஜே.பி இருப்பதாகத் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. 

சேலம் மெய்யனூர் மெயின் ரோட்டில் ஸ்ரீவித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அங்கு, யாஷிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுமி, 3-ம் வகுப்பு படித்துவருகிறார். வகுப்பு ஆசிரியர் சதீஷ், யாஷிகாவைத் தொடர்ச்சியாகப் பாலியல் துன்புறுத்தல் செய்துவந்துள்ளார். அதை அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், தங்களின் உறவினர்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆகியோருடன் சென்று, ஆசிரியர் சதீஷைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். உறவினர்களில் சிலர் அப்போது ஆசிரியர் சதீஷைக் கோபத்தில் தாக்கியுள்ளனர். சதீஷை போலீஸார் கைது செய்தனர். பிறகு, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் உட்பட ஐந்து பேர்மீது கொலை மிரட்டல், பொது இடத்தில் தாக்கியது உட்பட ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மாநகரத் தலைவர் சதீஷ்குமார், பொருளாளர் கதிர்வேல் ஆகியோரைக் கைதுசெய்தனர்.