வேட்டையாடி விளையாடினாரா வேலுமணி?

வெளிச்சத்துக்கு வந்த டெண்டர் முறைகேடுகள்...

செப்டம்பர் 11-ம் தேதி... உள்ளாட்சித் துறையில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய ஆறு விருதுகளை டெல்லி சென்று வாங்கினார், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே, உள்ளாட்சித் துறை டெண்டர் முறைகேடுகள் குறித்த செய்திகள் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருந்தன. ‘‘நாங்கள் விதிகளை மீறி எந்த டெண்டரும் வழங்கவில்லை. என்மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் நிரூபித்தால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார்; கட்சிப் பதவியிலிருந்தும் விலகத் தயார். நிரூபிக்காவிட்டால், தி.மு.க தலைவர் பதவியிலிருந்து ஸ்டாலின் விலகுவாரா?’’ என டெல்லியில் இருந்தபடி சவால் விட்டார் வேலுமணி.

வேலுமணியைச் சுற்றிச் சுழலும் சர்ச்சைகள் என்னென்ன? உள்ளாட்சித் துறையைக் கையில் வைத்துள்ள  எஸ்.பி.வேலுமணிமீது தி.மு.க-வின் எம்.பி-யான ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையிடம் அடுத்தடுத்து புகார் கொடுத்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick