தமிழுக்கு தனிப் பெருமை!

 

`நேஷனல் ஜியோகிராபிக்’ பட்டியலிட்டுள்ள உலகின் டாப் 10 உணவு நகரங்களில் இரண்டாவது இடம் நம்ம சென்னைக்கே! காரணம், சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் கிடைக்கும் சுவையும் புதுமையும் மிகுந்த  உணவுகள்தாம். உலக தெருக்கடை உணவு வரிசையிலும் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்திருக்கிறது. ஊரின் பெயருக்கே பெருமை சேர்க்கும் அளவுக்கு தனித்துவமான பல சுவைகள் நம்மிடத்தில் உண்டு. நட்சத்திர ஹோட்டல்களிலும் `தட்டுக்கடை விழா’ நடத்தி சுவை ரசிகர்களை ஈர்க்கும் அளவுக்கு இதற்கு சிறப்பு அதிகரித்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!