நவராத்திரி பண்டிகையும் பிரசாதங்களும்

விழாக்கோலம்தீபா பாலச்சந்தர்

சோழர் காலத்திலேயே அரச விழாவாக நவராத்திரி கொண்டாடப் பட்டதாகக் கூறப்படுகிறது. சிவனை வழிபட ஒரு ராத்திரி, சிவராத்திரி எனவும் சக்தியை வழிபட ஒன்பது ராத்திரிகள், நவராத்திரி எனவும் நம் முன்னோர் சொல்வர். ஆண்டுக்கு நான்கு நவராத்திரிகள் வருகின்றன. இருப்பினும், புரட்டாசி மாதத்தின் வளர்பிறை பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியுடன் நிறைவடையும் இந்த நவராத்திரியைத்தான் வீட்டில் கொலு வைத்து விசேஷமாகக் கொண்டாடி வருகிறோம். இந்த ஒன்பது நாள்களும் முப்பெரும் தேவியரை வழிபட வேண்டும். முதல் மூன்று நாள்கள் துர்கையின் வழிபாடு, நடுவில் உள்ள மூன்று நாள்கள் லட்சுமி வழிபாடு, அடுத்த கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதி வழிபாடு. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!