வடகிழக்குப் பருவமழை பயன் தருமா? - பல்கலைக்கழகம் கணிப்பு

முன்னறிவிப்பு

அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நிலவவிருக்கும் வடகிழக்குப் பருவமழைக்காலத்தில், தமிழகத்துக்குக் கிடைக்கக்கூடிய மழையளவு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். அந்த அறிக்கையில்... “தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திலுள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் மூலம், ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. கடலின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் அதன் மண்டலக் காற்றழுத்த குறியீடு ஆகியவற்றைக் கொண்டு... ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து பெறப்பட்ட ‘மழை மனிதன்’ என்னும் கணினி மென்பொருளின் மூலம் தமிழகத்துக்குக் கிடைக்கும் மழையளவு கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவகால சராசரி மழையளவு 925 மி.மீ. இந்த ஆண்டு, தமிழகத்தில் பல மாவட்டங்களில் 60 சதவிகித அளவு மழை கிடைக்க வாய்ப்புண்டு. பொதுவாகவே தமிழகம் முழுவதும் சராசரி மழையளவு கிடைக்க வாய்ப்புண்டு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!