கேழ்வரகு... சிறிய தானியம், பெரிய லாபம்! - டெல்டாவில் செழிக்கும் சிறுதானியச் சாகுபடி

மகசூல்

காவிரி டெல்டா விவசாயிகள், அதிகளவு தண்ணீர் தேவைப்படக்கூடிய பயிர்களான நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களைத்தான் தொடர்ந்துச் சாகுபடி செய்து வருகிறார்கள். இதுபோன்ற பயிர்களை மட்டுமே நம்பியிருப்பதால், வறட்சிக் காலங்களில் கடும் நெருக்கடியைச் சந்திக்கிறார்கள், இப்பகுதி விவசாயிகள்.

சிறுதானியங்கள், பயறு வகைகள் போன்றவற்றை மாற்றுப்பயிராகப் பரிந்துரைத்தாலும்... ‘அவை நம் பகுதியில் விளையாது’ என்றே பெரும்பாலான டெல்டா விவசாயிகள் நினைக்கிறார்கள். இவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, 2 ஏக்கர் நிலத்தில் கேழ்வரகைச் சாகுபடி செய்திருக்கிறார், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ‘புலியூர்’ நாகராஜன். இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணிச் செயலாளராக இருக்கிறார்.

திருச்சி மாவட்டம், வயலூர் அருகேயுள்ள இனாம்புலியூரில் 2 ஏக்கர் பரப்பில் ஒற்றை நாற்று நடவு முறையில் கேழ்வரகு நடவு செய்திருக்கிறார், புலியூர் நாகராஜன். இப்பகுதியில் கேழ்வரகு செழித்து வளர்ந்திருப்பதைத் தொடர்ந்து, சுற்று வட்டார கிராம மக்களுக்கு இவரது வயலில் களப்பயிற்சியை அளித்துள்ளது, தமிழக வேளாண்மைத்துறை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்