என் மகன்கள் - சரண்யா பொன்வண்ணன் | Saranya Ponvannan talks about her sons characters actors - Aval Vikatan | அவள் விகடன்

என் மகன்கள் - சரண்யா பொன்வண்ணன்

ஆச்சர்யம்

மிழ் சினிமாவின் அழகான, அன்பான அம்மா, சரண்யா பொன்வண்ணன். ‘அவனா செய்றான்; அவன் கெரகம். ஆடி போய் ஆவணி வந்தா டாப்பா வருவானாம், பட்டிக்காட்டு சோசியர் சொன்னாரு’ என்கிறபோது அப்பாவியான அம்மாவும்கூட. அம்மா கேரக்டரில் சரண்யாவின் செகண்டு இன்னிங்ஸ் தொடங்கி 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. அஜித், விக்ரம் தொடங்கி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி வரை எல்லா முன்னணி ஹீரோக்களுக்கும் அம்மாவாக நடித்துவிட்டார்.

‘அட, ஆமால்ல... எல்லா ஹீரோக்களும் எம் புள்ளைங்க! யாருக்குக் கிடைக்கும் இப்படியொரு வரம்! கிளாமருக்குப் பயந்ததாலேயே ஹீரோயின் கேரியர் ஃபெயிலியர். ‘அம்மா’ ரோல்ல நடிக்கத் தொடங்கினப்போ, பலரும் ‘ஏன் இந்த முடிவு?’னு கேட்டாங்க. எல்லாத்தையும் கடந்து, மாநில, தேசிய விருதுகளையெல்லாம் வாங்கியாச்சு. விருதை விடுங்க... நிஜ வாழ்க்கையில எனக்கு மகன்கள் இல்லையேனு ஆரம்பத்துல வருத்தப்பட்டிருக்கேன். அந்தக் குறை தெரியாம கடந்து வந்ததுக்கு முக்கியக் காரணம் இந்தப் புள்ளைங்கதான். சும்மா ‘நடிப்பு’னு கடந்துபோயிட முடியாதுங்க. அம்மா - மகன் அந்நியோன்யத்தையெல்லாம் அனுபவிச்சிருக்கேன். படம் முடிஞ்சதா, பை பை சொல்லிட்டுக் கிளம்பிடுறதில்லை. சில நடிகர்களுக்கு நான் எப்பவும் அம்மாதான்’’ என்கிறவர், அந்த மகன்கள் ஒவ்வொருவர் குறித்தும் பேசுகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick