சூப்பர் ஹீரோஸ்! - 1 - அங்குர் தாமா | Super Heroes - Chutti Vikatan | சுட்டி விகடன்

சூப்பர் ஹீரோஸ்! - 1 - அங்குர் தாமா

புதிய தொடர்

சூப்பர் ஹீரோஸ் என்றால் ஸ்பைடர் மேன், பேட் மேன், சூப்பர் மேன், வொண்டர் வுமன் போன்ற கற்பனை  நாயக / நாயகிகளைப் பற்றியதல்ல. இந்த சூப்பர் ஹீரோஸ் நம்முடன் வாழ்பவர்கள். அசாதாரணமான சூழ்நிலைகளைத் தம் அசாத்தியமான நம்பிக்கையால் வென்றவர்கள். கற்பனை செய்யவே இயலாத சாதனைகளைப் படைத்துக் கொண்டிருப்பவர்கள். மனவலிமையால் வலிகளைக் கடந்து வழிகாட்டியாக மாறிய எளிய மனிதர்கள். வாருங்கள் சந்திக்கலாம்.

அப்போது அங்குர் தாமாவுக்கு ஐந்து வயது. வர வர சரியாகப் பார்வை தெரியவில்லை, கண்களில் ஒளி மங்குகிறது என்றெல்லாம் அவனுக்கு சொல்லக்கூட தெரியவில்லை. நாளடைவில், நடப்பதற்கே அதிகம் தடுமாறினான். அப்போதுதான் தாமாவின் பெற்றோர் அவனது குறைபாட்டை உணர்ந்தனர். ஆறு வயதில் அவன் முற்றிலும் பார்வையை இழந்திருந்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick