கேள்வி பதில்: ராகு கேது தோஷம் திருமணத்தடையை உண்டாக்குமா?

? எனக்குப் பல வருடங்களாகத்  திருமணம் தடைப்பட்டு வருகிறது. என்ன காரணம்? தோஷம் எதுவும் இருக்கிறதா? பரிகாரம் செய்யவேண்டுமா?
- பா.நாகராஜன், பெங்களூரு


திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். ஒருவருக்கு இளமையிலேயே திருமணம் நடைபெறலாம். சிலருக்குத் திருமணத்துக்கு உரிய வயதில் திருமணம் நடைபெறலாம்; சிலருக்குத் தாமதமாக நடைபெறக்கூடும்; இன்னும் சிலருக்கு 50 வயதுக்கு மேலும் திருமணம் நடைபெறும். சிலருக்குத் திருமண பிராப்தியே இல்லாமலும் போய்விடும்.

ஒருவருடைய பூர்வஜன்ம ஆசைகள், கர்ம வினைகளின்படியே அவருக்கு இந்தப் பிறவி அமைகிறது. எனவே, ஒருவருடைய திருமணத்தைப் பற்றி ஆராயும்போது, அவருடைய பூர்வபுண்ணிய ஸ்தானத்தைத் துல்லியமாக ஆராயவேண்டும். அதன்பிறகு திருமணத்தை நிர்ணயிக்கும் மற்ற பாவங்களைப் பற்றியும் ஆராய்ந்து பலன் சொல்லவேண்டும்.

ஒருவருடைய லக்னாதிபதி, ராசி அல்லது நவாம்ச ராசிக்குத் திரிகோணத்தில், சுக்கிரன் அல்லது 7-ம் அதிபதி கோசாரத்தில் வரும்போது திருமணம் நடைபெறும். 7-ல் உள்ள, 7-க்கு உடைய, 7-ம் இடத்தைப் பார்க்கும் கிரகத்தின் தசா காலம் வரும்போதும், லக்னாதிபதியான கிரகம் கோசாரத்தில் 7-ம் வீட்டில் அமரும்போதும் திருமணம் நடைபெறும். லக்னத்துக்கு 2, 7, 11 கிரகங்களின் தசா காலங்களிலும், 7- வீட்டுக்கு உரிய நட்சத்திர அதிபதியின் காலத்திலும், சுக்கிரன் நின்ற நட்சத்திர அதிபதி காலத்திலும் திருமணம் கூடி வரும். கோசாரப்படி குரு 2, 5, 7, 9, 11 ஆகிய வீடுகளில் குரு சஞ்சரிக்கும்போதும் திருமணம் கூடி வரும்.

நீங்கள் மகர லக்னம். 8-ல் செவ்வாயும் 12-ல் சுக்கிரனும் உள்ளனர். தற்போது தங்களுக்குக் குரு தசை - குரு புக்தி நடைபெறுகின்றன. மேலோட்டமாகப் பார்க்கும்போது, தோஷம் எதுவும் இல்லாதது போல் தோன்றும். ஆனால், 8-ம் வீட்டில் குரு பார்வை இல்லாமல் செவ்வாய் இருப்பது, செவ்வாய் தோஷமாகும். எனவே செவ்வாய்க்கு உரிய பரிகாரங்களைச் செய்வதன் மூலம் தோஷ நிவர்த்தி ஏற்பட்டு, திருமணம் கூடி வரும்.

சந்திரன் லக்கினத்துக்கு 4 அல்லது 5-ல் இருப்பது களத்திர சௌக்கியத்தைக் குறிப்பிடும். அந்த வகையில், தங்கள் லக்னத்துக்கு 7-ம் வீட்டுக்கு உரிய சந்திரன், 5-ல் உச்சம் பெற்று இருப்பதால் திருமண யோகம் உண்டு. தங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷத்துடன் குரு பகை வீட்டில் இருப்பதாலும், சுக்கிரன் 12-ல் மறைந்து இருப்பதாலும் ஜோதிடர்களிடம் ஆலோசித்து, உரிய பரிகாரங்களைச் செய்வதன் மூலம் தோஷம் நிவர்த்தியாகி திருமணம் கூடி வரும். 

? எனக்குத் திருமண யோகம் எப்போது?
- ஆர்.சங்கரநாராயணன், பெங்களூரு

தாங்கள் கும்ப லக்னம். 7-ம் அதிபதி சூரிய பகவான்ன் 11-லும், களத்திர காரகரான சுக்கிரன் கேந்திர பாவத்தில் அனுகூலமாகவும், குரு 9-ல் அனுகூலமாகவும் உள்ளனர். ஆனால், 3-ல் நீசம் பெற்ற சனியுடன் சந்திரன் இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick