சிக்கிம் மாநிலத்துக்கு ஐ.நா விருது!

ஜெ.லெவின்

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சிக்கிம் மாநிலம், கடந்த 2016-ம் ஆண்டில், ‘முழு இயற்கை விவசாய மாநிலம்’ என அறிவிக்கப்பட்டது. ‘முழு இயற்கை விவசாயம்’ என உலகின் எந்தவொரு நாடோ, இந்தியாவின் எந்தவொரு மாநிலமோ எடுக்காத கொள்கை முடிவை சிக்கிம் மாநிலம் எடுத்து அதை நிறைவேற்றியுள்ளது.

ஐ.நா சபையின் ஓர் அங்கமான உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO), சிக்கிம் மாநிலத்துக்கு ‘வருங்காலக் கொள்கை விருது’ (Future Policy Award) அளித்துக் கௌரவித்துள்ளது. 25 நாடுகளிலிருந்து வந்த 51 கொள்கை முடிவுகளில் சிறந்ததாகச் சிக்கிம் மாநிலத்தின் இயற்கை விவசாயக் கொள்கை தேர்வு பெற்று ‘தங்க விருதை’ வென்றுள்ளது. கடந்த அக்டோபர் 12-ம் தேதி இத்தாலியில் உள்ள ரோம் நகரில் நடந்த விழாவில், சிக்கிம் மாநில முதல்வர் பவன்குமார் சாம்லிங் கலந்து கொண்டு விருதைப் பெற்றுக்கொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்