‘‘இப்போதுதான் அமைச்சர் எப்போதும் விவசாயிதான்!’’ | Puducherry Agriculture Minister takes time off for farming - Pasumai Vikatan | பசுமை விகடன்

‘‘இப்போதுதான் அமைச்சர் எப்போதும் விவசாயிதான்!’’

அண்மையில் புதுச்சேரி யூனியன் பிரதேச வேளாண்துறை அமைச்சர் வயலில் இறங்கி விவசாயம் செய்யும் படங்கள் இணையதளத்தில் பாராட்டுகளைப் பெற்றது. புதுச்சேரியின் வேளாண் துறை அமைச்சராக கமலக்கண்ணன் உள்ளார். காரைக்கால் திருநள்ளாறு தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏவான இவர், அமைச்சராகப் பதவி வகித்தாலும் விவசாயக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர் என்பதால் எந்தவித ஆடம்பரமும், ஆர்ப்பாட்டமும் இவரிடம் இருக்காது. அதனால், எவரும் இவரை எளிதில் அணுகி தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம்.

நானும் ஒரு விவசாயிதான் என்று அடிக்கடி சொல்லும் இவர், விவசாயிகளுக்கான பிரச்னைகளை உணர்வுபூர்வமாக அணுகுபவர். விவசாயிகளைப் பாதிப்பது போன்ற சிறு தவறுகள் நடந்தாலும் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பார். பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்த தூய்மை இந்தியா சேவையை ஏற்று அதிரடியாகக் கழிவு நீர் வாய்க்கால்களில் இறங்கி சுத்தம் செய்யத் தொடங்கினார். சுமார் ஒரு மாதத்துக்கு மேலாக அந்தப் பணியை விளம்பரம் இல்லாமல் செய்ததால் அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick