ஒரு ஏக்கர், 70 நாள்கள், ரூ. 1,55,550... சின்ன வெங்காயம் பெரிய லாபம்!

மகசூல்

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன், சின்ன வெங்காயத்தை இயற்கை முறையில் தொடர்ந்துச் சாகுபடி செய்து வருகிறார். ராஜபாளையத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கன்னித்தேவன்பட்டி என்னும் கிராமத்தில்தான் மனோகரனின் தோட்டம் உள்ளது.

நமது வருகையை முன்கூட்டியே தெரிவித்திருந்ததால், நம்மை அழைத்துச் செல்ல ஊர் எல்லையில் காத்திருந்த மனோகரன், பேசிக்கொண்டே நம்மைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.

“பருத்தி, கம்பு, சோளம், உளுந்து, பாசி, வெங்காயம், மக்காச்சோளம்னு அப்பா சாகுபடி செஞ்சுக்கிட்டு இருந்தார். அப்பா ரசாயன உரத்தைப் பயன்படுத்தமாட்டார். நான் பத்தாவது வரைதான் படிச்சேன். வீட்டுல சும்மா இருந்த என்னை அப்பாதான் விவசாயம் பார்க்கச் சொன்னார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்