சந்தை இறங்கும்போது வாங்கு! - பஃபெட் சொல்லும் சீக்ரெட்

பங்குச் சந்தை

ங்குச் சந்தையில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்ய நினைப்பவர்கள், எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்துகிற கடன் ஃபண்டு களில் கொஞ்சம் பணத்தை முதலீடு செய்துவைத்திருப்பது அவசியம். சந்தை திடீரென இறங்கும்போது, கடன் ஃபண்டுகளில் இருக்கும் இந்தப் பணத்தை எடுத்து, பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்.

இந்த ரகசியத்தை யார் உணர்ந்துவைத்திருக்கிறார்களோ, இல்லையோ, பங்குச் சந்தை குருவான வாரன் பஃபெட் நன்றாகவே தெரிந்துவைத்திருக்கிறார். கடந்த ஐந்து காலாண்டுகளாக 100 பில்லியன் டாலர் அளவுக்கு (இந்திய ரூபாய் மதிப்பு 7.20 லட்சம் கோடி) பணத்தைக் கையில் வைத்திருந்தார். அவர் வாங்க நினைக்கும் பங்குகளின் விலை வாங்குகிற விலைக்கு வரட்டும் என்று காத்திருந்தார். கடந்த சில வாரங்களில் அவர் எதிர்பார்த்தபடியே நடக்க, இப்போது பங்குகளை வாங்குகிறார் வாரன் பஃபெட்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick