பூங்காக்களில் விளைபொருள்கள் அங்காடி... தோட்டக்கலைத்துறையின் ‘விற்பனை’ முயற்சி!

விற்பனை

விவசாயத்தில் இருக்கும் முக்கியப் பிரச்னை விற்பனைதான். இதற்கு அரசு அமைப்புகள் பல வகைகளில் உதவி வருகின்றன. பால் வளத்துறையின் மூலம் பால் கொள்முதல் செய்யப்பட்டு ‘ஆவின்’ என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகள் நேரடியாகவே விற்பனை செய்ய வேளாண் துறையின் மூலமாக உழவர் சந்தைகள், உழவர் உற்பத்தியாளர் கம்பெனி என்று அமைக்கப்பட்டுள்ளன. சுயஉதவிக் குழுக்கள் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அரசு அலுவலகங்களில் விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில், தோட்டக்கலைத் துறை மூலம் தோட்டக்கலைப் பொருள்களை மலிவு விலையில் விற்பனை செய்யும் வகையில் சென்னையில் விற்பனை அங்காடி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் இயங்கும், ‘தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை’ என்கிற அமைப்பின் மூலமாக இது தொடங்கப் பட்டுள்ளது. சென்னையின் மையப்பகுதியான அண்ணா மேம்பாலத்துக்கு அருகேயுள்ள செம்மொழிப் பூங்காவில் கடந்த அக்டோபர் 24-ம் தேதி விற்பனை அங்காடி தொடங்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை அங்காடியை வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தொடங்கி வைத்தார். சென்னை மாநகர மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது, இந்த விற்பனை அங்காடி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!