ஜிஞ்சர் பிரெட் ஹவுஸ்

ஜிஞ்சர் பிரெட் ஹவுஸின் வரலாற்றுச் சுருக்கம்... ‘ஜிஞ்சர் பிரெட்’ என்பது சுக்கு, பட்டைத்தூள் கலந்த பிஸ்கட் வகையைச் சேர்ந்தது. இது பதினாறாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் மிகவும் பிரபலமாக இருந்தது. வட்டம், சதுரம், மனிதன் போன்ற உருவில் சிறிய அளவில் வடிவமைப்பு செய்யப்பட்ட இந்த பிஸ்கட்டுகள், ‘ஹான்சல் அண்டு கிரேட்டல்’ என்ற உலகப் புகழ்பெற்ற கதைக்குப் பின்னர் வீடு போன்று வடிவம் எடுக்கத் தொடங்கின.

இன்று கிறிஸ்துமஸ் வேளையில் சிறிய, பெரிய அளவுகளில் ஜிஞ்சர் பிரெட் ஹவுஸ் செய்து சாக்லேட்டுகள் கொண்டும், மிட்டாய்கள் கொண்டும் அலங்கரிக்கின்றனர். இன்னும் சிலர், வீட்டின் உள்ளே குட்டி அலங்கார விளக்குகள் வைத்துக் கண்கவர் விதத்தில் அலங்காரம் செய்வர். இந்த ஜிஞ்சர் பிரெட் ஹவுஸ் செய்முறையைச் சுலபமான வழியில் ஸ்டெப் பை ஸ்டெப் முறையில், தேவையான டெம்ப்ளேட்களோடு அளித்திருக்கிறார் ராஜபாளையத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் அகிலா விமல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்