SPY PHOTO - ரகசிய கேமரா - சீக்கிரம் எதிர்பார்க்கலாம்... கியா பிக்கான்ட்டோ!

கியா மோட்டார்ஸ்... அடுத்த ஆண்டில் தனது முதல் காரை (SP Concept), இந்த கொரிய நிறுவனம் இந்தியாவில் களமிறக்க உள்ளது. அதற்கு முன்பாக கியாவின் சிறிய சைஸ் காரான பிக்கான்ட்டோ, இந்தியாவில் தற்போது டெஸ்ட்டிங்கில் இருப்பது தெரிய வந்திருக்கிறது. பெங்களூருவில் இதனைப் படம் பிடித்திருக்கிறார், மோட்டார் விகடன் வாசகரான ராஜ்குமார். 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், கியா ஸ்டாலில் 3rd Gen பிக்கான்ட்டோ காட்சிப்படுத்தப்பட்டது,  உலகச் சந்தையில் விற்பனையில் இருக்கும் i10 காரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த கார், இந்தியாவில் இருக்கும் கிராண்ட் i10 காரைவிட அளவில் 170மிமீ நீளம்/175மிமீ அகலம்/25மிமீ வீல்பேஸ் சிறிதாக இருக்கிறது. உயரம் 75மிமீ அதிகமாக இருப்பதால், இடவசதியில் பெரிய மாற்றமில்லாமல் இருக்கலாம். பூட் ஸ்பேஸைப் பொறுத்தவரை, இரண்டு கார்களும் ஏறக்குறைய சமமாகவே இருக்கின்றன (255 லிட்டர்). இந்த கியா காரின் சைஸ் மற்றும் இன்ஜின் ஆப்ஷன்களை வைத்துப் பார்க்கும்போது, டாடா டியாகோ முதல் மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் வரையிலான பல மாடல்கள் இதற்குப் போட்டியாக இருக்கலாம். அதற்கேற்ப பிக்கான்ட்டோவில் எக்கச்சக்க வசதிகளை எதிர்பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்