அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

டொ
யோட்டா யாரிஸ், ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் சான்ட்ரோ, மாருதி சுஸூகி ஸ்விஃப்ட், மஹிந்திரா மராத்ஸோ,  ஹோண்டா CR-V என்று ஒவ்வொரு செக்மென்ட்டிலும் புதிது புதிதாக பல அறிமுகங்களை 2018-ம் ஆண்டு கண்டிருக்கிறது. கார்களுக்குச் சற்றும் சளைக்காமல் மோட்டார் பைக் மார்க்கெட்டும் பல அதிரடியான ஆச்சரியங்களைப் பார்த்துவிட்டது. அந்த வகையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்கியுள்ளது, ஐகானிக் பிராண்ட்டான ஜாவா. ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்ட்டல் GT650, பிஎம்டபிள்யூ G310R மற்றும் G310GS, யமஹா YZF-R15 V3.0 ஆகிய பைக்குகளும் போட்டிக் களத்தில் முன்வரிசையில் இருக்கின்றன.

ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டரை இங்கே மூன்றாவதாகக் குறிப்பிட்டாலும், விற்பனை ரீதியாகப் பார்த்தால் இதுதான் டாப். இந்தச் சந்தை 2018-ம் ஆண்டு படுசுறுசுறுப்பாகவே இருந்தது. டிவிஎஸ் என்டார்க் துவங்கி சுஸூகி பர்க்மேன், ஏப்ரிலியா SR125 என்று கார் மற்றும் பைக்குகளுக்கும் குறைவில்லாமல் புதிய மாடல்களும் இந்தியாவுக்கு வந்துவிட்டன.

இதில் சிறந்த ஹேட்ச்பேக் எது, சிறந்த செடான் எது, சிறந்த எஸ்யூவி, சிறந்த எம்பிவி எது என்பதை அடுத்த இதழில் நாம் முடிவு செய்யலாம். அதற்கு முன்பாக இந்த ஆண்டின் சிறந்த கார், சிறந்த பைக் மற்றும் சிறந்த ஸ்கூட்டர் எது என்பதை முடிவு செய்ய, வழக்கம்போல உங்களின் பேருதவி எங்களுக்குத் தேவைப்படுகிறது.

உங்கள் தேர்வுகள் எதுவானாலும், அதை ஆன்லைனிலோ அல்லது இந்த இதழில் கொடுக்கப்பட்டுள்ள கூப்பனில் டிக் அடித்தோ எங்களுக்குத் தெரியப்படுத்தலாம். தங்களின் இந்தப் பேருதவிக்கு, முன்கூட்டியே நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்

ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்