“காவல் துறையில் பாதுகாப்பு இல்லை!” - தற்கொலைக்கு முயன்ற திருநங்கைக் காவலர்...

திருநங்கையை சீருடைப் பணிக்குத் தேர்வுசெய்து இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்தது தமிழகக் காவல் துறை. அந்தப் பெருமைக்கு இழுக்கு ஏற்படும் வகையில் மேலதிகாரிகள் தன்னிடம் நடந்துகொண்டதாகக் குற்றம்சாட்டி, தற்கொலைக்கு முயன்றுள்ளார் திருநங்கைக் காவலர் ஒருவர்.

யாசினி, தாட்சாயினி, பிரபா மோகன் உட்பட விரல்விட்டு எண்ணக்கூடிய திருநங்கைகள் தமிழகக் காவல் துறையில் பணியாற்றுகின்றனர். இவர்களில் நஸ்ரியாவும் ஒருவர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த இவர், கடந்த 3-ம் தேதி இரவு எலி மருந்து சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நஸ்ரியாவிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!