கம்பெனி டிராக்கிங்: பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (NSE SYMBOL: BALKRISIND) | Company tracking - Balkrishna Industries Ltd - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/12/2018)

கம்பெனி டிராக்கிங்: பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (NSE SYMBOL: BALKRISIND)

மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் நெடுஞ்சாலை அல்லாத வாகனங்கள் பயன்படுத்தும் டயர்களை (ஆஃப் ஹைவே டயர்) உற்பத்தி செய்து, விற்பனை செய்துவரும் பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (NSE SYMBOL: BALKRISIND) என்னும் நிறுவனத்தைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.

   நிறுவனத்தின் வரலாறு

1987-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம்  விவசாயம், கட்டுமானம் மற்றும் தொழிற் சாலைகள், எர்த் மூவிங், துறைமுகம் மற்றும் சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் வாகனங் கள், அனைத்து நிலப்பரப்பிலும் செல்லும் (ஆல் டெரைன்) வாகனங்கள், தோட்டங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் போன்ற வற்றிற்குத் தேவைப்படும் சிறப்புக் குணாதிசயங்களைக் கொண்ட டயர்களை உற்பத்தி செய்வதில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டு வெற்றிகரமாக வியாபாரம் செய்துவருகிறது இந்த நிறுவனம். தனிப்பட்ட ஒரு பிரிவில் முழுமையான கவனத்துடன் ஆரம்பக்காலம் தொட்டு செயல்பட்டுவருவதால், உலக அளவில் உள்ள ஆஃப் ஹைவே டயர் துறையில் 6% அளவிலான சந்தைப் பங்களிப்பைக் கொண்டு திகழ்கிறது இந்த நிறுவனம்.

  வெளிநாட்டிலும், உள்நாட்டிலும்