கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் கமாடிட்டி | Commodity trading - Metal and oil - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/12/2018)

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் கமாடிட்டி

தங்கம் (மினி)

தங்கம் பங்குச் சந்தையுடன் காலம் காலமாகக் கொண்ட எதிர்மறையான உறவைக் கடந்த வாரங்களில் நிரூபித்துள்ளது. சென்ற வாரம் தங்கத்தின் விலை டிசம்பர் 3-ம் தேதியிலிருந்து இரண்டு வாரங்களாக எப்படி நகர்ந்தது, அதே காலகட்டத்தில் பங்குச் சந்தை எப்படி எதிர்மறையாக நகர்ந்தது என்பதை விளக்கிக் கூறியிருந்தோம்.

அடுத்த வாரத்திலும் அதே நிலைதான் தொடர்ந்தது. பங்குச் சந்தை தட்டுத் தடுமாறி ஏறிக் கொண்டிருக்க, தங்கம் தட்டுத் தடுமாறி இறங்கிக்கொண்டிருந்தது. ஏன் தட்டுத் தடுமாறி என்ற சொல்லை உபயோகிக்கிறேன் என்றால், இரண்டிலுமே நிச்சமற்ற தன்மை இருந்தது. இதை நிரூபிப்பதுபோல், பங்குச் சந்தை சென்ற வாரம், தாக்குப் பிடிப்பதுபோல் இருந்தாலும், கடந்த வெள்ளிக்கிழமையன்று மிக பலமாக இறங்கியுள்ளது. தங்கம் அந்த அளவிற்கு பலத்தைக் காட்டி ஏறுமா என்று இனிதான் பார்க்கவேண்டும்.