கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி | Commodity trading - Agri products - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/12/2018)

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில்

மெ
ன்தா ஆயில், ஒரு லோயர் டாப் மற்றும் லோயர் பாட்டம் உருவமைப்பைத் தோற்றுவித்து வருகிறது என்று தொடர்ந்து எழுதி வருகிறோம். அதாவது, இது ஒரு வலிமையான மற்றும் தொடர் டவுன் ட்ரெண்ட் என்பதற்கான அறிகுறி என்றும் குறிப்பிட்டிருந்தோம். 

பொதுவாக, ஒரு டவுன் ட்ரெண்டில் இருக்கும் விலையானது, நல்ல இறக்கத்திற்குப் பிறகு சற்றே மேலே எழும். இதை ‘புல்பேக் ரேலி’ என்று சொல்வோம்.  இந்த ‘புல்பேக் ரேலி’ என்பது முன்பு மென்தா ஆயில் எந்த அளவுக்கு இறங்கியதோ, அதைவிடக் குறைவான அளவுக்கு ஏறி, அதன்பின் தொடர்ந்து இறங்க முடியாமல், அடுத்தக் கட்ட பெரிய இறக்கத்திற்குத் தன்னை தயார் செய்துகொள்ளும். அதைப்போலவே தான் இதுவரை மென்தா ஆயில் இறங்கி வந்துகொண்டிருக்கிறது.