நனவாகி வரும் நம்மாழ்வாரின் கனவு! | Symposium on Organic farming for Farmers - Pasumai Vikatan | பசுமை விகடன்

நனவாகி வரும் நம்மாழ்வாரின் கனவு!

கூட்டம்

ருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார், ஊர் ஊராகச் சென்று இயற்கை விவசாயம் குறித்த பிரசாரத்தை மேற்கொண்டார். அவரது கனவு கொஞ்சம் கொஞ்சமாகத் தற்போதுதான் நனவாகிக் கொண்டிருக்கிறது. அதை மெய்ப்பித்திருக்கிறது, சேலம் மாவட்டம், பூசாரிப்பட்டியில் கடந்த டிசம்பர் 30-ம் தேதி நடைபெற்ற நம்மாழ்வார் நினைவுக் கருத்தரங்கு. தமிழ்நாடு அரசு வேளாண்துறை, ‘பசுமை விகடன்’ ஆகியவை இணைந்து... ‘இனியெல்லாம் இயற்கையே’ என்ற பெயரில் நடத்திய இக்கருத்தரங்கில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் செ.சௌந்தரராஜன், “ஒரு காலத்தில் நம்மாழ்வார் மட்டும்தான் தனிமனிதனாக இயற்கை விவசாயத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். இன்று அரசே பாரம்பர்ய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் இயற்கை விவசாயத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick